/* */

ஈரோட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகம்

ஈரோட்டில் பெட்ரோல் விலை இன்று 31 பைசா அதிகரித்து, லிட்டர் ஒன்று ரூ.100.37-க்கு விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகம்
X

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

நாட்டில் 5 மாநில சட்டமன்றத்தேர்தல் முடிவடைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில், இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 97 விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னரும், தொடர்ந்து அதிகரித்து வந்தது.

நேற்று முன்தினம், மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.06 பைசாக்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 31 பைசா அதிகரித்து, லிட்டருக்கு ரூ.100.37-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.04-க்கு விற்பனையானது. இன்று 27 பைசா அதிகரித்து ரூ.94.31 -க்கு விற்பனையானது.

தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய- மாநில அரசுகள் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 29 Jun 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!