/* */

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
X

மாணவர்களை வரவேற்கும் ஆசிரியர்கள்.

தமிழகத்தில் கொரோனோ பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை.மாறாக ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனோ பரவல் சற்று குறந்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில் 1747 பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் மாணவ மாணவிகள் 19 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகளில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

இதையடுத்து பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.சி.சாலையில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும் பூங்கோத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான கொரோனோ நெறிமுறைகளான முககவசம் , கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்கபட்டன. மேலும் பள்ளி திறப்பதை முன்னிட்டு முன்கூட்டியே வகுப்பு அறைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கபட்டன. 19 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் தங்களுடன் படிக்கும் நண்பர்களை பார்த்து உற்சாகமாக வகுப்பு அறைகளுக்கு சென்றனர்.


Updated On: 1 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  7. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  10. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு