/* */

ஈரோடு ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு...

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு...
X

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்க பட்டது.

நிகழ்ச்சியின்போது, ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தூய்மை பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு அவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தூய்மை காவலர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரால் பாராட்டு பெற்ற மாக்கினாங்கோம்பை ஊராட்சி தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய பாராட்டு சான்றிதழை காண்பித்து தூய்மை பணியாளர் பட்டம்மாள் அனைவரிடமும் வாழ்த்து பெற்றார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள், முன்னாள் கவுன்சிலர் விசுவநாதன், தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சாந்தி ஜெயராம், ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி, ஊராட்சி செயலாளர் ராதிகா மற்றும் பல்வேறு அதிகாரிகள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jan 2023 6:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை