/* */

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை

தீபாவளிக்கு ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது: கொரோனாவால் கடந்தாண்டு ஒட்டுமொத்த பொருட்களின் விற்பனையும் பாதித்தது. இந்தாண்டு தீபாவளிக்கு மக்கள் சற்று இயல்பு நிலை திரும்பினாலும், ஜவுளி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் அதிகம் வாங்கினர். தங்கம் மீதான மோகம் குறைந்திருந்தது.

அதேசமயம் அக்.,13ல் ஒரு கிராம், 4,585 ரூபாய், 14ல், 4,530 ரூபாய், 29ல், 4,530 ரூபாய், 30ல், 4,525 ரூபாய் என விற்றது. நவ.,1, 2ல், 4,520 ரூபாய், 3ல், 4,505 ரூபாய்க்கு விற்றது. கடைசி நேரத்தில் தான் பெரும்பாலான நிறுவனங்களும் போனஸ், முன்பணம் வழங்கினர். இதன் காரணமாகவும், மாவட்டத்தில் விவசாயத்துக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, பாசனப்பணி தீவிரமாக நடந்ததாலும், தங்கம் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்தது. தீபாவளி விற்பனையாக, ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனையானது. கடந்தாண்டைவிட அதிகம் என்றாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், சற்று குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 10 Nov 2021 11:45 AM GMT

Related News