/* */

கதிர் நரசிங்க பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வழிபாடு

ஆஞ்சநேயருக்கு தாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசியால் அலங்கரித்து வடைமாலை சார்த்தப்பட்டது

HIGHLIGHTS

கதிர் நரசிங்க பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வழிபாடு
X

திண்டுக்கல் மாவட்டம் வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

திண்டுக்கல் மாவட்டம் வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரம் ,அபிஷேகம் , ஆராதனை. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர.

அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அருகே வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.பால், தயிர் தேன் உள்ளிடவைகளில் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் தீபாரதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசி உள்ளிட்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி,நத்தம், உலுப்பகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன் ராஜசிம்மன் மற்றும் கண்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Updated On: 3 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?