/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து விசாரணை.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்
X

குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்.

திண்டுக்கல் சோலைகால் திரையரங்கு அருகே உள்ள சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு யூகேஸ் 15 என்ற மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இதே பகுதியில் பூர்விக சொத்து உள்ளதாகவும் இந்த சொத்தை பிரித்து தர ரமேஷ் பாபுவின் தந்தை மற்றும் சகோதரர் செல்வ கண்ணன் என்பவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமேஷ் பாபுவின் மனைவி நாகராணி, மகன் மற்றும் மகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்பொழுது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி விசாரணை செய்தனர். தனது கணவரின் பூர்வீக சொத்தை எனது மாமனார் மற்றும் எனது கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் ஆகியோர் பிரித்து தர மறுக்கின்றனர்.

இதன் காரணமாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுக்க சென்று அங்கு உள்ள அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்தேன். தற்போது வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (17.08.2021) காலை மாவட்ட ஆட்சியர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனது குழந்தைகளுக்கும் எனது மாமனாரின் பூர்வீக சொத்து கண்டிப்பாக பிரித்து தர வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் பிரச்சனை செய்து வருகிறார்.எனவே உடனடியாக எங்களது பூர்வீக சொத்தை பிரித்து தர வேண்டும். எனது கணவரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீக்குளிக்க முயற்சி செய்ததாக நாகராணி கூறினார்.


Updated On: 17 Aug 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை