/* */

திண்டுக்கல் அருகே அதிவேகமாக வந்த மணல் கடத்தல் லாரி: உடல் நசுங்கி இருவர் சாவு

திண்டுக்கல் அருகே அதிவேகமாக வந்த மணல் கடத்தல் லாரி மோதி இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே அதிவேகமாக வந்த மணல் கடத்தல் லாரி: உடல் நசுங்கி இருவர் சாவு
X

திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 38) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த பால் வியாபாரி சாலமன் ராஜ்(48) என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் வேடப்பட்டியில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மருதாசிபுரம் அருகே வெள்ளோடு பகுதியை சேர்ந்த திமுகவை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான அரசு அனுமதியில்லாமல் குளத்தில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் பல அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிய நிலையில், லாரியை சிறை பிடித்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த உறவினர்கள் இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 Dec 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்