/* */

காலி பணியிடங்களை நிரப்ப நில அளவையர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவையர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

காலி பணியிடங்களை நிரப்ப நில அளவையர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
X
திண்டுக்கல்லில் நில அளவையர்கள் ஒன்றிப்பின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மா மு கோவிலூர் பிரிவு சின்னத்தம்பி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநிலத் தலைவர் காயாம்பூ உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மறு நில அளவை பணியில் உதவி இயக்குனர் தலைமையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.தமிழகத்தில் தற்போது நில அளவை பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்தோடு பணி புரிந்து வருகின்றனர்.இதனை சரி செய்யும் விதமாக அதிக பணியாளர்களையும்,காலி பணியிடங்களை நிறப்ப வேண்டும்,

எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட யூ. டி.ஆர். மறுஅளவை திட்டம் என்பது உறுவாக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.இதனை புதிதாக நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பணியாளர்களை கொண்டு மறு சீரமைக்க வேண்டும். மேலும் மண்டல துணை இயக்குனர் நிலையில் உதவி இயக்குனரை நேர்முக உதவியாளராக புதிய பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக கோட்ட கிளை துணைத்தலைவர் ஜீவன் ராஜ் நன்றியுரை வழங்கினார்.

Updated On: 12 Dec 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்