/* */

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்: தமாகா தலைவர் ஜிகே வாசன்

பாலியல் சீண்டல் என்பது உலகத்தில் இருக்கக்கூடாது. இந்தியாவில் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இருக்கவே கூடாது

HIGHLIGHTS

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்: தமாகா தலைவர் ஜிகே வாசன்
X

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்

பாலியல் தவறு செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். திண்டுக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி சீனிவாசன் திருமண விழாவிற்கு அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த மூன்று வாரங்களாக பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நேரங்களில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கும் விதமாக தேவையற்ற பிரச்னைகளை கொண்டு வருகின்றனர். இது நாட்டின் வளர்ச்சியை தடுத்துவிடும்.கொரோனா முடிந்தது பொருளா தாரத்தில் மக்கள் சற்று உயர்ந்து வரும் வேளையில், எதிர்கட்சிகள் மசோதா குறித்து விவாதங்களில் கலந்துகொண்டு தீர்வு கண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும்.

நாட்டின் வளர்ச்சி கருதி மத்திய மசோதாக்கள் நடைபெறுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். நேற்றைய முன்தினம் பள்ளி கட்டிட சுவர் ஒன்று இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்களில் இதுபோன்ற நிலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருக்கக்கூடாது. தமிழக அரசை பொறுத்தவரை நீண்ட மழை காரணமாக பள்ளி கட்டிடங்களில் சேதம் அடைந்துள்ளன.அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். பாலியல் சீண்டல் என்பது உலகத்தில் இருக்கக்கூடாது. இந்தியாவில் இருக்கக் கூடாது. ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் தனி மனித ஒழுக்கம் தேவை.

ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும். அதையும் தாண்டி அவ்வாறு செய்பவருக்கு தூக்குத் தண்டனை தகும். தமிழக அரசு நிறைய வாக்குறுதிகள் அள்ளிக் கொடுத்துள்ளனர். தற்பொழுது வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜி.கே. வாசன்.


Updated On: 21 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு