/* */

பூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள் வேதனை

திண்டுக்கல்லில் பூக்கல் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் சில்லறை விற்பனை மந்தமாக உள்ளது.

HIGHLIGHTS

பூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள் வேதனை
X

திண்டுக்கல் மலர் சந்தை

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, வெள்ளோடு, செம்பட்டி, மயிலாப்பூர், ஆவாரம்பட்டி, தாடிக்கொம்பு, கோவிலூர், பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,

இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் பூக்களின் வரத்துகேற்ற நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் பூக்கள் விலை கிடைத்த போதிலும், அதை வாங்கி சில்லரை விற்பனை செய்பவர்களுக்கு விலை கிடைத்தாலும் விற்பனை அதிகளவில் இல்லை. கடந்த காலங்களில் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும் என்பதால் பூக்களில் வரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதோடு அதிகமான விற்பனையும் நடைபெறும்.

ஆனால் தற்போது கோவில்களில் வழிபாட்டிற்கு திறந்தபோதிலும் ஆடி மாத திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லாததால் பூக்கள் விலை கிடைத்தும் விற்பனை குறைவாக உள்ளதாக சில்லரை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கடைகள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் பூ வியாபாரிகளுக்கும் அரசு பரிசீலனை செய்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இன்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 250 ரூபாய்க்கும் , சம்பங்கி 100 ரூபாய்க்கும், ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 80 ரூபாய்க்கும், துளசி ஒரு கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனையானது.

Updated On: 23 July 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  2. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  3. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  4. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  5. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  6. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  7. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  8. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...