/* */

மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்ப மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 25 இடங்களுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்தார்

HIGHLIGHTS

மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்ப மனு
X

திண்டுக்கல் மாநகராட்சித்தேர்தலில்  போட்டியிய மாநில பொருளாளர் திலகபாமாவிடம் விருப்ப மனு அளித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களிடம் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பாண்டியன் நகரில் உள்ள திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமாவிடம்,தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தங்களது விருப்ப மனுக்களை வழங்கினர்.

இது குறித்து மாநில பொருளாளர் திலகபாமா கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 25 வார்டுகளுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும். அந்த இலக்கை நோக்கியே எங்களது கட்சியின் செயல்பாடுகளும் தொண்டர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும் என தெரிவித்தார். இதில் ஏராளமான கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

Updated On: 7 Dec 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!