/* */

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

அதிமுகவை சோதனை மூலம் மிரட்டிப் பார்க்கும் செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இதைக்கண்டு ஒருபோதும் அதிமுக துவண்டுவிடாது

HIGHLIGHTS

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
X

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவை சோதனை மூலம் மிரட்டிப் பார்க்கும் செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இதைக்கண்டு ஒருபோதும் அதிமுக துவண்டுவிடாது. திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீட்டிலும் திமுக அரசு லஞ்ச ஒழிப்பு துறையினரை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.இதனை கண்டிக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியதாவது:திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுகவை, சோதனை என்கிற போர்வையில் மிரட்டுகின்ற வேலையை செய்து வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை திசை திரும்ப வேண்டும் என்ற நோக்கில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அதிமுக துவண்டுவிடாது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வீறு கொண்டு எழுந்து மக்களுக்கான பணிகளில் அதிமுக தொடர்ந்து ஈடுபடும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.


Updated On: 15 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு