/* */

அமலாக்க துறை அதிகாரி அ்ங்கிட் திவாரி சிறைக்காவல் டிச.28 வரை நீ்ட்டிப்பு

அமலாக்க துறை அதிகாரி அ்ங்கிட் திவாரி சிறைக்காவல் டிசம்பர் 28 ம் தேதி வரை நீ்ட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

அமலாக்க துறை அதிகாரி அ்ங்கிட் திவாரி சிறைக்காவல் டிச.28 வரை நீ்ட்டிப்பு
X

அங்கிட் திவாரியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி. டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.

அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்தலேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணைநடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும்அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது

அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்புசார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கிட் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.

Updated On: 15 Dec 2023 5:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு