/* */

ஐ.பி.எம்மின் 2 வருட உயர் தொழில்நுட்ப பட்டயப் படிப்பிற்கான சேர்க்கை: ஆட்சியர் தகவல்

வேலை வாய்ப்புடன் கூடிய 2 ஆண்டு பயிற்சியில் சேர டிப்ளோமா ஐடிஐ தேர்ச்சி, +2 தேர்ச்சி அல்லது பட்டத்தில் 60% மதிப்பெண் தேவை

HIGHLIGHTS

ஐ.பி.எம்மின் 2 வருட உயர் தொழில்நுட்ப பட்டயப் படிப்பிற்கான சேர்க்கை: ஆட்சியர் தகவல்
X

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி

ஐ.பி.எம்மின் 2 வருட உயர் தொழில்நுட்ப பட்டயப் படிப்பிற்கான சேர்க்கை

இந்திய அரசின் மத்திய பயிற்சி பொது இயக்ககம் (டி.ஜி.டி) மற்றும் IBM (இந்தியா) இணைந்து 2022 முதல் 2024 வரையிலான கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள 24 தேசிய திறன் பயிற்சி மையங்களில் , IT,Networking & Cloud Computing (NSQF Level-6) என்ற பிரிவில் 2 வருட உயர் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மற்றும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இது ஒரு வேலை வாய்ப்புடன் கூடிய இரண்டாண்டு பயிற்சி ஆகும். இதில் சேர்ந்து பயில டிப்ளோமா, ஐ.டி.ஐ தேர்ச்சி, +2 தேர்ச்சி, அல்லது பல்கலைக் கழகப்பட்டம் ஆகியவற்றில் 60% மதிப்பெண்கள் அல்லது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பயிற்சி பயில தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ. 3000 உதவித்தொகை IBM-INDIA ஆல் வழங்கப்படும் மேலும் இன்டர்ன்ஜிப் பயிற்சியின் பொழுது ரூ 15,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.இதில் சேர்ந்து பயிற்சி பெற www.nimionlineadmission.in என்ற இணையதளத்தில் 20-04-2022 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2022 4:45 AM GMT

Related News