/* */

தர்மபுரி மாவட்டத்தில் 89.2 மி.மீ. மழை பதிவு: விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் 89.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்ட எல்லைப்பகுதியான சித்தேரி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.

அரூர் பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் வீசிய மழையால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இந்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் இப்பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டு வருகிறது.தொடர்ந்து மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தர்மபுரியில் 4 மி.மீ, மழையும்,பாலகோட்டில் 39 மி.மீ, பென்னாகரத்தில் 7 மி.மீ, அரூர்7 மி.மீ.பாப்பிரெட்டிப்பட்டியில் 32.2 மி.மீ மழையும் மாவட்டத்தில் மொத்தம் 89.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Updated On: 21 Aug 2021 7:14 AM GMT

Related News