/* */

ரஜினி நலமுடன் வாழ தருமபுரியில் 108 சங்காபிஷேகம் பூஜை

நடிகர் ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி தருமபுரியில் ரஜினியின் சகோதரர் தலைமையில் 108 சங்காபிஷேகம் பூஜை.

HIGHLIGHTS

ரஜினி நலமுடன் வாழ தருமபுரியில் 108 சங்காபிஷேகம் பூஜை
X

தருமபுரியில் ரஜினியின் சகோதரர் தலைமையில் நடைபெற்ற 108 சங்காபிேஷகம் பூஜை.

தருமபுரி சனத்குமார் ஆத்துமேட்டில் உள்ள பழைமை வாய்ந்த சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ரஜினியின், சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்வாட் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

இந்த பூஜையில் ரஜினி மற்றும் உலக மக்கள் நன்மைக்காக, 108 சங்காபிஷேகத்தை, ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்டது, சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினியின் விரும்பம், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே அவரின் விருப்பத்தை, சுவாமியிடம் பிராத்தனையாக வைத்துள்ளேன். அனைவரும் குடும்ப உறவுகளோடு ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என சத்திய நாராயண ராவ் தெரிவித்தார்.

Updated On: 13 Dec 2021 5:45 PM GMT

Related News