/* */

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை  நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
X

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் 33வது வார்டு சித்தலூர் பகுதியில் உள்ள 7வது தெருவில் கடந்த 6 வருட காலமாக தெருவிளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளது. தெருவுக்குள் செல்லும் பாலம் உடைந்துள்ளதால் அவசரகாலத்தில் எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரி செய்யக்கோரி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் காரணத்தால் நகராட்சி தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் சரி செய்து தருவதாக அதிகாரிகள் கூறியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

Updated On: 30 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...