/* */

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் ரூ 9 லட்சம் பணம் திருட்டு

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே பணத்தை திருடியவர் கைது 6 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல்

HIGHLIGHTS

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில்  ரூ 9 லட்சம்  பணம் திருட்டு
X

 ஏடிஎம் மிஷினில் இருந்து  பணத்தை திருடிய கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கடலூர் அடுத்த கே.என் பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று காலை வைக்கப்பட்ட நிலையில் இரவு பணம் திருடு போய் இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஏடிஎம் மையத்தில் இருந்து 9 லட்சம் பணம் களவு போய் இருப்பதாக மேற்பார்வையாளர் ராஜா என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஏ.டி.எம் மையத்திற்கு பணத்தை நிரப்புவதற்காக பணத்தைக் கொண்டு சென்ற நான்கு நபர்களிடம் விசாரித்த போது கிருஷ்ணகுமார் என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். நேற்று மாலை சக ஊழியருடன் ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றதாகவும் அந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாததால் இரவு நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

நெல்லிக்குப்பம் அருகில் விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரிடமிருந்து ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. மீதமுள்ள பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 March 2022 5:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு