/* */

கடலூர் ஆணவ கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு, 10 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை

கடலூர் ஆணவ கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 10 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர் ஆணவ கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு, 10 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை
X
ஆணவ கொலை செய்யப்பட்ட கண்ணகி- முருகேசன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் ( 25 ).தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர் , பி.இ. ( கெமிக்கல் ) பட்டதாரியாவார் . இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி ( 22 ) என்பவரை காதலித்து வந்தார் . இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர் . எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர் .

இந்த நிலையில் முருகேசன்,கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் , மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் , ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் . கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது . எனவே , முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8 - ஆம் தேதி முருகேசனையும் , மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர் .

பின்னர் முருகேசன் , கண்ணகி ஆகியோரை ஊரார் முன்னிலையில் அரை நிர்வாணப் படுத்தி அடித்து உதைத்து அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு , காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு , சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சில நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது . அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர் . அதில் முருகேசன் , கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர் .

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும் , எனவே , வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின . இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு 2004 - ஆம் ஆண்டு மாற்றப்பட்டது . அதே ஆண்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, சி.பி.ஐ. அதில் , அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து , உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், இறந்த பெண்ணின் தந்தை,அண்ணன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

கடலூர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 660 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த விசாரணையானது நடைபெற்று வந்தது. இதில் 36 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூர் எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா இந்த வழக்கின் பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மற்றும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்து தடையத்தை அழித்ததாக காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரும் வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில் 15 பேரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த 15 பேரில் இரண்டு பேர் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டு மற்ற 13 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய தீர்ப்பை சிறிது நேரத்தில் தட்டனை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

அதன் பிறகு நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கும் பொழுது காட்டுமிராண்டித்தனமாக இந்த செயல் நடந்துள்ளதாகவும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் விதமாக இந்த செயல் நடந்துள்ள நிலையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் முழுக்க முழுக்க கௌரவக் கொலையை தங்கள் குடும்ப கௌரவத்திற்காக செய்துள்ளதாகவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக இரண்டு பேரையும் துடிக்கத்துடிக்க விஷம் கொடுத்து அவர்கள் உயிரிழப்பதற்கு முன்பாகவே தீ வைத்து எரித்துள்ளனர். இதில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் இதில் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் பொருட்டு இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் இரண்டாவது குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். கண்ணகியின் தந்தை துரைசாமி, மற்றும் ரங்கசாமி, கந்தவேலு,ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை ஆகிய 10 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகளை வழங்கினார்.

மேலும் காவல்துறையினர் இதில் உடந்தையாக இருந்ததாகவும், தடயங்களை அழித்ததாகவும், வன்கொடுமைக்கு துணை போவதாகவும் கூறி ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தீர்ப்பின் முடிவில் கண்ணகி எரிந்தது டன் இது நிற்கட்டும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து விருத்தாச்சலம் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

Updated On: 24 Sep 2021 5:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு