மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர்: 4 பேர் மீது வழக்குப்பதிவு

ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியின் திடுக்கிடும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
X

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிபாளையத்தை சேர்ந்த 17 வயது இளம் பெண். இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், பண்ருட்டி -சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக பண்ருட்டி போலீஸாரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சித்த பெண் பதினேழு வயது மாணவி என்பதால், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவி கூறுகையில், நான் நர்சிங் படித்து வருவதால் மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் தேவை என்பதால் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி ஏற்காடு பகுதியில் பயிற்சிக்குச் செல்ல கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி என்கின்ற நிஷா கூறியதன் பேரில் தான் ஒப்புக்கொண்டேன்.

என்னுடன் நர்சிங் பயிற்சிபெரறும் பெனிடிக்.சுகன்யா, நர்சிங் பயிற்சி கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், நர்சிங் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி ஆகியோருடன் ஏற்காடு சென்றோம் அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை.

மாறாக வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியபோது, என்னுடன் வந்த ஆண்கள் மதுபானங்கள் வாங்கி வந்து அருந்தினார்கள். என்னிடம் குளிர்பானம் எனக் கூறி மது குடிக்க வைத்தனர். நான் குடித்துவிட்டு மயங்கி விட்டேன். மயங்கியதை பயன்படுத்தி மேற்கண்ட நபர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான், ஏற்காட்டிலிருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன். இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார். இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி, தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார், அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய நால்வர் மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய டேவிட்அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குளிர்பானம் என்று கூறி நர்சிங் மாணவிக்கு மது அருந்த சொல்லி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On: 15 Jan 2022 4:25 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா