/* */

கடலூர் தி.மு.க. அமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கண்டனம்

பொய் செய்திகளை பரப்பி வருவதாக தி.மு.க. அமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.அருண்மொழித்தேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கடலூர் தி.மு.க. அமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கண்டனம்
X
அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த மனோகர் என்ற ஒன்றிய கவுன்சிலர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னையில் கடலூர் மாவட்டத்தின் அமைச்சரும், தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கணேசன் சென்னையில் முதலமைச்சரை சந்தித்து நல்லூர் ஒன்றியத்தின் ஏழு கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்து இருக்கிறார்கள். இனி நல்லூர், விருத்தாசலம், ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என அவர் கொடுத்த பேட்டி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளி வந்து கொண்டிருப்பதை அறிந்தேன். இது முழுக்க முழுக்க ஒரு தவறான செய்தியாகும். உண்மை என்னவென்றால் நல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் 7 பேர். அதில் 6 பேர் என்னுடன் உள்ளார்கள். அதில் மூன்று பேர் ஒன்றிய செயலாளர்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அமைச்சர் கணேசன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்து விட்டதாக ஒரு பொய்யான, அவதூறான செய்தியை பரப்பி உள்ளார். சுயேட்சையாக வெற்றி பெற்ற இருவர் எப்பொழுதே தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

அந்த இரண்டு பேரை இப்பொழுதுதான் தி.மு.க.வில் இணைந்ததாக கூறுகிறார்.அண்ணா தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் தி.மு.க.வில் இணைந்து விட்டனர் என்று ஒரு அமைச்சர் கூறுவது கண்டனத்துக்குரியது. நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் எங்கள் கூட்டணியில் பா.ம.க. இருக்கும் போது ஒன்றிய குழு தலைவர் ஆனார். அவர் இன்று ஒன்றியக் குழுத் தலைவராக இருக்கும் போது விருத்தாசலம், நல்லூர் ஒன்றியங்களில் தி.மு.க. ஒன்றியக் குழுத் தலைவர்கள் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

இதனை நாங்கள் அதிகார துஷ்பிரயோகமாக பார்க்கிறோம். விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் ஒரு மாதமாக தி.மு.க. வேஷ்டி கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அவர் கணேசன் காலடியில் விழுந்து கிடக்கிறார். கடந்த 21ந் தேதி விருதாச்சலத்தில் இருக்கக்கூடிய அனைத்து கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு தி.மு.க. கவுன்சிலர் தலைமையிலே கோட்டாட்சியரை சந்தித்து, அ.தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தி.மு.க.வில் சேர்ந்த செல்லத்துரை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கை மனுவில் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய குழு தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை இழந்த செல்லதுரை என்பவரை இன்று தி.மு.க.வில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சேர்த்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகள் அதிகம் இருக்கிறது. கொரோனாவால் மக்கள் பல இன்னல்களை அடைந்து வருகின்றனர், மழை வெள்ளத்தால் விவசாயிகள் கடும் வேதனையில் இருக்கின்றனர். இப்படி மக்கள் பணிகள் நிறைய இருக்கும்போது தி.மு.க.வில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுதான் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அவர்கள் பொருளாதார செலவுகள் செய்து ஆள் பிடிக்கின்ற வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன். மக்கள் பிரச்சினையில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இனிமேல் அவர்கள் ஆள் பிடிக்கும் வேலையை தொடர வாய்ப்பில்லை. ஏனென்றால் யார் யார் போக வேண்டுமோ அவர்கள் எல்லாம் சென்று விட்டதால் எங்கள் கட்சி அ.தி.மு.க. வெகு சுத்தமாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 26 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு