/* */

தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில் சோகம்!

கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

HIGHLIGHTS

தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில் சோகம்!
X

பைல் படம்.

கோவை பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பிரவீன், கவின், தக்சன் மற்றும் சஞ்சய் ஆகிய 4 மாணவர்கள். இவர்கள் தீத்திபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் நால்வரும் பெருமாள் கோவில்பதி கிராமத்தில் உள்ள முண்டாந்துறை தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர்.

சுமார் 40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில், தற்போது 15 அடிக்கு நீர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீச்சல் தெரியாமல் தடுப்பணையில் குளிப்பதற்கு இறங்கிய பிரவீன், கவின், தக்சன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

இந்நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காருண்யா நகர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மூன்று பேரின் உடல்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காருண்யா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 April 2024 10:28 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  2. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  3. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  4. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  5. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  6. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  8. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  9. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...