/* */

நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: தொற்று பாதிப்பு அபாயம்

நொய்யல் ஆற்றங்கரையில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், களிம்பு போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: தொற்று பாதிப்பு அபாயம்
X

நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு சமவெளி பகுதிகளில் 180 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வரும், நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து புட்டுவிக்கி பாலம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றங்கரையில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், களிம்பு போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இக்கழிவுகளால் அப்பகுதியில் மேயும் கால்நடைகளும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது‌. ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில் விஷமிகள் சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ள சூழலியல் ஆர்வலர்கள், இது மனித குலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அபாயகரமான கழிவுகளை ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், நீராதாரங்களில் கழிவுகளை கொட்டுவோரை பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 14 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்