/* */

வெள்ளியங்கிரி மலையில் ஏற முயன்ற பக்தர் தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வெள்ளியங்கிரி மலையில் ஏற முயன்ற பக்தர் தவறி விழுந்து உயிரிழப்பு
X

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் (கோப்பு படம்ஸ்ர)

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வயிறு மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூகம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 April 2024 1:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்