/* */

இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட்: அமைச்சர் தகவல்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்படும் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

HIGHLIGHTS

இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட்: அமைச்சர் தகவல்
X

கோவை இ.எஸ்.ஐ மருத்துவனை, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்திற்க்கு நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் பங்கேற்றார். அப்போது கொரோனா படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை குறித்து, இ.எஸ்.ஐ மருத்துவனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வுக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை 830 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையில் முதல் மற்றும் இரண்டாம் அலையிலும் இதுவரை இந்த மருத்துவமனையில் 17000 பேரை குணப்படுத்தியுள்ளனர். இம்மருத்துவமனையில் உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் சிகிச்சைக்கு ஏற்ப ஆக்சிஜனை குறைத்து பயன்படுத்த வேண்டும். ஆக்ஜிசனைக் தேவைகேற்ப பயன்படுத்தி வீணடிக்காமல் இருப்பதில் இஎஸ்ஐ மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு ஆக்சிஜன் பிளாண்ட்டும், ஒரு சப்ளையரும் உள்ளன. மருத்துவர்களின் கோரிக்கையின் படி கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட இங்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

Updated On: 15 May 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?