/* */

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது: செந்தில் பாலாஜி

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

HIGHLIGHTS

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது: செந்தில் பாலாஜி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 8 கோடியே, 28 லட்சத்து, 35 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை புதுப்பித்தல், குட்டை புதுப்பித்தல் பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று 200 படுக்கைகள் கொண்ட புதிய படுக்கைகளை பயன்பாட்டிற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் ரோட்டரி கிளப் சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் கான்சண்டேட்டர் இயந்திரத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசியபோது, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 படுகைகள் ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை கொண்டதாக உள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர்கள் காட்டினார்.

ஆனால் தற்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது? எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்கிறார். அதன்படி முடிவு வெளியாகும் என அவர் கூறினார்.

Updated On: 22 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!