/* */

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார்

வாலிபர்கள் மிரட்டி மாருதி கார் மற்றும் 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார்
X

ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் 

உடுமலை தளி பகுதியில் மாமரத்துபட்டி தென் குமாரபாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரிடம் நேற்று வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த மாருதி கார் மற்றும் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் கண்ட்ரோல் ரூமுக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது.

போலீசார் சினிமா பாணியில் மாருதி காரை பின்தொடர்ந்து சின்னபாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்‌. போலீசார் விசாரணையில் தங்கராஜ் இடம் கார் மற்றும் 3 பவுன் பறித்த ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என விசாரணையில் தெரிய வந்தது. கார் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் 4 பேரை அழைத்துச் சென்று வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்த காவலர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?