/* */

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!

எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
X

காவல் கண்காணிப்பாளஎ பத்ரி நாராயணன்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். நாளை மறுநாள் கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடி காரமடை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி, கோவை மாவட்ட காவல் எல்லையில் நாளையும், நாளை மறுநாளும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாரத பிரதமர் வருகின்ற 10ம் தேதி புதன்கிழமையன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை காவல் நிலைய பகுதியில் உள்ள தென் திருப்பதி நால்ரோடு சந்திப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார்.

வால்பாறைக்கு வர தனிப்பட்ட இருசக்கர வாகனம் அல்லது கார் வைத்திருந்தால் சிறப்பு. பொள்ளாச்சியிலிருந்து தேயிலைத் தோட்டங்களின் இடையேயான வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி வால்பாறைக்குச் செல்வது வாகனப் பிரியர்களுக்கு விருப்பமான அனுபவமாக இருக்கும்

பிரதமர் அவர்களின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ.சுற்றளவிற்கு பிரிவு 24 (ii) of Drones Rules 2021- ன் படி நாளையும், நாளை மறுநாளும் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது கூட்டம் நடக்கும் தென் திருப்பதி நால்ரோடு அதனை சுற்றி 5 கி.மீ.தொலைவிற்கும், அவர் வரவிருக்கும் வழித்தடத்திலும் இரு தினங்களுக்கு எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 April 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்