/* */

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலி: கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலி: கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
X

வாளையார் பகுதியில் கோவை ஆட்சியர் சமீரன் ஆய்வு

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திருக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நிபா வைரஸ், ஜிகா வைரஸ், மற்றும் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்படுவதால் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை வருவோரிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதோடு, மாவட்டத்திற்கு வருவோரின் வாகன எண்கள் பதிவு செய்யப்படுகிறது. வாளையாறில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன் கூறும் போது, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு 13 வழிகள் உள்ளது. அந்த வழிகள் அனைத்தும் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 72 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்றிதழ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை சோதனையும் நடத்தி வருகிறோம்.

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவிய சம்பவம் குறித்த கேள்விக்கு, பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது. நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். யாரும் அச்சப்பட வேண்டாம். கோவையைப் பொருத்தவரை 83 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலைக்கு செல்லாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிபா வைரசை பொருத்தவரை கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சலுக்கும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் உதகையில் மதுபான கடை மற்றும் குடிமைப் பொருள் வாங்க ஊசி போட்டு இருந்தால் மட்டுமே பெறப்படும் என்ற கேள்விக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

Updated On: 6 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை