/* */

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோவை - கோவா விமான சேவை மீண்டும் தொடக்கம்

கோவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோவை - கோவா விமான சேவை மீண்டும் தொடக்கம்
X

கோவை விமான நிலையம் (கோப்பு படம்).

கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. கோவையில் இருந்து கோவா மற்றும் கோவையிலிருந்து ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- “கோவை விமான நிலையத்தில் தற்போது தினமும் சராசரியாக 23 முதல் 28 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. கோவை -கோவா மற்றும் கோவை -ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோவை - கோவா இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் நான்கு நாட்கள் இந்த சேவை வழங்கப்படுகிறது.

கோவாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் விமானம் கோவைக்கு 11 மணிக்கு வந்தடையும். அதேபோல் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு கோவா சென்றடையும். அதேபோல் கோவையில் இருந்து ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை பிப்ரவரி 21-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுகிறது.

இவ்வாறு விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை - கோவா இடையே விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Feb 2024 10:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்