/* */

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

Kovilpalayam Temple-கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது

HIGHLIGHTS

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
X

Kovilpalayam Temple-கோவை கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராண வரலாற்று சிறப்புமிக்க காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் எமதர்மன் சாபவிமோசனம் பெறுவதற்காக கவுசிகா நதிக்கரையில் நுரையும் மணலுமாய் சேர்ந்து செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமான குரு பகவானாக அமைந்துள்ளார். இந்த கோவில் குரு பரிகார ஸ்தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் வருகிற 22 -ம் தேதி(சனிக்கிழமை) குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து திருக்கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:

குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியை யொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடக்கிறது.

அதனை தொடர்ந்து பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் காண்பிக்கப்படுகிறது. இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படுகிறது.

குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளும் வகையில் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

இந்த லட்சார்ச்சனை விழாவில் ரூ400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு பகவான் அருள் பெற கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 4:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...