/* */

10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர்

வனத்துறையில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தர ஆணை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராமசந்திரன்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம், மாற்று திறனாளிகள் துறை, சமூக நலத் துறை, வேளாண் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 35,57,000 ரூபாய்கான காசோலைகளை 21 பயனளிகளுக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சின் காரணமாக வெகுவாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சநிலையில் இருந்தபோது பல்வேறு நடவடிக்கைகயின் காரணமாக வெகுவாக கட்டுபடுத்தபட்டு தற்போது 200 பேருக்கும் கீழ் கொரோனா தொற்று பரவல் உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் மிகச் சிறந்த பணியை செய்து வருகிறார் எனவும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக பல லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர் என்றவர் ரத்தக கொதிப்பு,சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளானவர்களும் பலனடைந்துள்ளனர்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தி எல்லாப் பகுதிகளிலுமே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக அனைத்து பாதுகாப்பான முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் வனத்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. வனத்துறைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டதாகவும், தற்போது திமுக தலைமையிலான அரசு மத்திய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

Updated On: 30 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி