/* */

கோவையில் குறையும் கொரோனா பாதிப்புகள்

கோவையில், பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

கோவையில் குறையும் கொரோனா பாதிப்புகள்
X

கோவை மாவட்டத்தில், கடந்த மே மாதத்தில் மட்டும், 90 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட, மே மாதத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம். இதேபோல மே மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் 552 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரி பாதிப்பில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 27 ம் தேதி 4734 ஆக பதிவானது. அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத்துவங்கின. மே 28 ம் தேதி 3992 ஆகவும், 29 ம் தேதி 3692 ஆகவும், 30 ம் தேதி 3537 ஆகவும், 31ம் தேதி 3488 ஆகவும், ஜீன் ஒன்றாம் தேதி 3332 ஆகவும், இரண்டாம் தேதி 3061 ஆகவும் குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4488 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.

பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 1007 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள், நேற்றைய தினம் 932 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 38 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1345 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் 40 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு அமல்படுத்திய கொரோனா ஊரடங்கு, சுகாதாரத்துறை மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பயனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால், விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் சாத்தியமாகும்.

Updated On: 3 Jun 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்