/* */

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் துறை விற்பனை கண்காட்சியகம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 40 நெசவாளர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

HIGHLIGHTS

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் துறை விற்பனை கண்காட்சியகம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

கண்காட்சியை துவக்கி வைத்து சேலைகளை பார்வையிடும் ஆட்சியர் சமீரன்

இந்திய அரசு ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெறும் இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கோவை அவினாசி சாலையில் உள்ள மீனாட்சி ஹாலலில் இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 40 நெசவாளர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற மீட்டரில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் ஆச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1,64,492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த கண்காட்சி இலவச அனுமதியுடன் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 29 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்