/* */

கோவையில் மராத்தான் போட்டி; மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கோவையில் நடந்த மராத்தான் போட்டியை, மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோவையில் மராத்தான் போட்டி; மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு
X

கோவையில் நடந்த மராத்தான் போட்டியை, மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று துவக்கி வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்தார்.

சுதந்திர தின விழாவையொட்டி, கோவையில் நடந்த மராத்தான் போட்டியை, மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரசு சார்பிலும் பல்வேறு கட்சிகள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் மராத்தான் போட்டி நடந்தது.

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா சார்பில் "Freedom Run" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மராத்தன் போட்டியை, மத்திய இணை அமைச்சர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த சுதந்திர ஒட்டம் கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து லட்சுமி மில் உட்பட முக்கிய சாலைகளின் வழியாக 7.2 கி.மீ தூரம் சென்று மீண்டும், இந்துஸ்தான் கல்லூரியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு. தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 10 நாட்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மலை கிராமங்களில் உள்ள மக்களும் தாமாக முன்வந்து இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர், என்றார்.

இந்நிகழ்வில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன், முன்னாள் மாவட்ட தலைவர் நந்தகுமார் உட்பட பாஜக கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 14 Aug 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?