/* */

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: துணை மேயர் வெற்றி செல்வன் பேட்டி

கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன் என துணை மேயர் வேட்பாளர் வெற்றி செல்வன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை:  துணை மேயர் வெற்றி செல்வன் பேட்டி
X

வெற்றி செல்வன்

கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் இரா.வெற்றி செல்வன். 51 வயதான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் திமுகவில் கோவை மாநகராட்சி 92 வது வட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92 வது வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல்முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய வெற்றி செல்வன், "எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் நன்றி. திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி தேடும் வரும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டு. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டில் இருந்து என்னை துணை மேயராக அறிவிக்கப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை மேயர் வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பை தேடிக் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி" என அவர் தெரிவித்தார்.

Updated On: 3 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்