/* */

திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு

Coimbatore News- திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு
X

Coimbatore News - பிரச்சாரத்தில் பாஜகவினர் ரகளை

Coimbatore News, Coimbatore News Today- கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செவ்வாய் கிழமை இரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்டவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பா.ஜ.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இது தரப்பினை சேர்ந்தவர்களும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி கொண்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினார். பாஜகவினரும், மே 17 இயக்கத்தினரும் முழக்கம் எழுப்பினர். மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மே 17 இயக்கத்தினர் உரிய அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டுகளை கழட்டுமாறு கூறியதால் காவல் துறையினருக்கும், மே 17 இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Updated On: 10 April 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  2. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  4. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  5. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  6. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  7. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  9. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  10. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...