/* */

கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு

நாளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு
X

திமுக காங்கிரஸ் வார்டு ஒதுக்கீடு உடன்பாடு.

கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 1 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!