/* */

உக்கடம் ஆத்துபாலம் மேம்பால பணிக்காக 40 வீடுகள் இடித்து அகற்றம்

உக்கடம் ஆத்துபாலம் மேம்பால பணிக்காக மாநகராட்சி அதிகாரிகள் சிஎம்சி காலனி பகுதியில் 40 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

HIGHLIGHTS

உக்கடம்  ஆத்துபாலம் மேம்பால பணிக்காக  40 வீடுகள்  இடித்து அகற்றம்
X

பாலம் கட்டுமான பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்காக 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக உக்கடம் சிஎம்சி காலனியில் கட்டப்பட்டிருந்த 157 வீடுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக ஆத்துப் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதி செல்வதற்காக இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சிஎம்சி காலனி பகுதியில் 100 வீடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது.

இதனிடையே இன்று உதவி நகர திட்டமிடல் அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சிஎம்சி காலனி பகுதியில் 40 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

இந்த பகுதியில் குடியிருந்தவர்களுக்கு புல்லுகாடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இடிக்கப்பட்ட 40 வீடுகளுக்கு பதிலாக இப்பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு