/* */

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க 8600 தெரு குழாய்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத 8 ஆயிரத்து 600 தெருக்களுக்கு குழாய் இணைப்புகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நேரு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க  8600 தெரு குழாய்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
X

சென்னையில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத 8 ஆயிரத்து 600 தெருக்களுக்கு குழாய் இணைப்புகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நேரு உத்தரவிட்டுள்ளார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நாள்தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவு, சென்னைக்கு வழங்கப்பட்டு வரும் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் மற்றும் பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புனரமைத்தல் ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் தினசரி சுமார் 850 மி.லி. குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை 1,146 மி.லி. ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது.

சென்னையில் உள்ள 35,000 தெருக்களில் குடிநீர் குழாய் அமைப்பு இல்லாத சுமார் 8,600 தெருக்களுக்குக் குடிநீர் குழாய் அமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும்.சென்னையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தையும் புனரமைத்து குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தபடும்.நெம்மேலியில் இயங்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான மாத்தூர், ஜல்லடம்பேட்டை, மடிப்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் கட்டமைப்பு தூர்வாரும் பணிகளில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாரவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளைத் துரிதப்படுத்தவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Updated On: 30 Jun 2021 2:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?