/* */

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்!
X

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம்.

துபாயிலிருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அந்த பயணிகளில் ஒருவரா டிப்டாப் இளைஞா் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா். ஆனால் சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த இளைஞரை மீண்டும் சுங்கதுறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து விசாரித்தனா். அவா் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த சாமீனோ ஜேசையா (26). இவா் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊா் திரும்புகிறாா். அவருடைய உடமைகளை முழுமையாக சோதனையிட்டனா். அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனா்.

அவா் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் பெல்ட்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்களை கைப்பற்றினா். அவைகளில் மொத்தம் ஒரு கிலோ 250 கிராம் தங்க பேஸ்ட் இருந்தது.அதன் சா்வதேச,மதிப்பு ரூ.63.2 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறையினா் பயணி சாமீனோ ஜேசையாவை கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 10 Jun 2021 11:53 AM GMT

Related News