/* */

திருவாெற்றியூரில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் காெள்ளை

திருவொற்றியூர் ரயில்வே காலனி குடியிருப்பில் ஒரே நாளி்ல் 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

திருவாெற்றியூரில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் காெள்ளை
X

மர்ம நபர்களால் பீராே உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

திருவொற்றியூர் ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவகுமார் 45. நேற்று இவர் பணிக்கு சென்றிருந்த நிலையில் இவரது அம்மா வீட்டை பூட்டிவிட்டு மார்க்கெட்டிற்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவின் வெளிப்புற பூட்டின் ஸ்குரு கலட்டப்பட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.7000 மதிப்புள்ள வெள்ளி நகை மற்றும் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் என அனைத்தும் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் வந்து சோதனையிட்ட பின்பு கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை விடுவதாக கூறிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் முழுமையாக சோதனையிடுவதற்கு‌ முன்பு தேவகுமாரின் வீட்டிற்கு எதிரே உள்ள கிரேன்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கிரேன்குமார் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர் வீட்டிற்கு வந்த பிறகே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் விபரம் குறித்து தெரியவரும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் கொள்ளையால் திருவொற்றியூர் ரயில்வே காலனி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவரது வீட்டில் கொள்ளை போன உடனே காவலர்கள் சுதாரித்து திருடர்களை கைது செய்திருந்தால் மேலும் அடுத்த சம்பவம் நடந்து இருக்காது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Updated On: 17 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...