/* */

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு
X

எண்ணெய் கழிவுகளால்  பாதிக்கப்பட்ட எண்ணூர் முகத்துவாரப் பகுதியை  பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த  அமைச்சர் உதயநிதி. உடன் அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் 

எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.

மிக்ஜாம் புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது சென்னை எண்ணெய் சுத்திக்கரிப்பு ஆலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு ஆயில் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கி கடலில் கலந்தது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி புகைப்படங்களை பார்வையிட்டார்.

அப்போது எண்ணெய்க் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது, இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் என்ன என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அமைச்சர் உதயநிதியிடம் விளக்கிக் கூறினார். பின்னர் அங்கு கூடியிருந்த மீனவர்களிடம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து குறைகளை உதயநிதி கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தென்மண்டல பசுமைப் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (டிச.17) எண்ணெய்க் கழிவுகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கூறியிருக்கிறது. இருப்பினும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும். இது குறித்து தீர்ப்பாயத்தில் எடுத்துரைக்கப்படும். எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நிவாரணங்களை அளிப்பது குறித்து முதல்வர் பரிசீலனை செய்வார். எண்ணெய்க் கழிவுகள் கலக்கும் பிரச்னை தொடராமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் உதயநிதி.

ஆய்வின்போது அமைச்சர் சி.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 15 Dec 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு