/* */

தமிழ்நாட்டிற்கு மேலும் 4,80,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

தமிழகத்திற்கு விமானம் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சேர்ந்தன.

HIGHLIGHTS

தமிழ்நாட்டிற்கு மேலும் 4,80,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
X

சென்னைக்கு விமானம் மூலம் வந்த தடுப்பூசிகள்.

தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது.அதோடு தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும்,24 மணி நேரமும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வசதிகள்,

80 வயதுக்கு மேற்பட்ட மிகமூத்த குடிமக்களுக்கு அவரவா் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை போடுவது போன்ற புதிய திட்டங்களையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

அதோடு தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்படுவதால்,மாணவா்கள்,ஆசிரியா்கள்,ஊழியா்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை அதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா்.நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.இதையடுத்து தமிழ்நாடு அரசு,மத்திய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பும்படி கோரிவருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று,மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்த 4,80,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது.

அந்த 4,80,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 40 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு,இன்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.

உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.

அந்த தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.

Updated On: 26 Aug 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?