/* */

பிக்பாஸிலும் கலக்க போகிறாரா? மெட்டி ஒலி சாந்தி..... படிச்சு பாருங்க....

Tamil Bigboss Shanthi Arvind-சின்னத்திரையில் கால்பதித்து சிலசினிமாக்களிலும் நடித்து தற்போது பிக்பாஸ் 6 சீசனுக்கு தேர்வாகியுள்ளார் மெட்லி ஒலி சாந்தி அரவிந்த்.

HIGHLIGHTS

Tamil Bigboss Shanthi Arvind
X

Tamil Bigboss Shanthi Arvind


கண்ணான கண்ணே சீரியலில் நடிகை வடிவுக்கரசியுடன் மெட்டிஒலி சாந்தி

தமிழகத்தில் சேட்டிலைட் டிவி சேனல்கள் வந்ததிலிருந்து தியேட்டர்களுக்குசெல்வோரின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது. முன்பெல்லாம் பொழுது போக்கு என்றால் சினிமாவாகத்தானிருந்தது. அதுவும் தியேட்டர்களுக்குசென்றுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் பொதுமக்கள் இருந்தனர்.

ஆனால் பிறகு வந்த சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கத்தால் ஒரே நாளில் பல சேனல்களில் ஒவ்வொரு படம் தொடர்ச்சியாக காட்டப்படுவதினால் தியேட்டர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. மேலும் டிவி சீரியல்கள் நன்கு வளர்ச்சியடைய துவங்கியது. உட்கார்ந்த இடத்திலிருந்த எழாதவாறு ஒவ்வொரு சீரியலின் கதையும் இருந்ததால் பெண்கள் பலர் இதனால் ஈர்க்கப்பட்டார்கள் என்று கூட சொல்லலாம்.அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி மெகா தொடர் நல்ல பார்வையாளர்களை தக்க வைத்துக்கொண்டது. அந்த தொடரில் நடித்தவர்தான் சாந்தி.

சாந்தி அர்விந்த் 1980 ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 17ந்தேதி பிறந்தார். இவர் தென்இந்திய நடன கலைஞரும் ஆவார். இவர் மெட்டி ஒலி சீரியலில் நல்ல கேரக்டரில் நடித்ததால் மக்கள் இவரை மெட்டிஒலி அடைமொழியுடன் மெட்டிஒலி சாந்தி என அழைத்தனர். அதேபோல் சாந்தி மாஸ்டர் என்ற பெயரும் இவருக்குண்டு. 1990 ம்ஆண்டு வெளியான கிழக்கு வாசல் திரைப்படத்தில் இவருடைய டான்ஸைக் காணலாம்.

2002 ம் ஆண்டில் சன்டிவியில் மெகாதொடராக வெளிவந்த மெட்டிஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததினால் மக்கள் மனதில் இடம்பிடித்தஇவருக்கு மெட்டி ஒலி சாந்தி என்ற பட்டப்பெயரை சூட்டினர். அதுமட்டும் அல்லாமல் இவர் மேலும் பல தொடர்களிலும் நடித்து தன் முத்திரையைப் பதித்துள்ளார். கண்ணான கண்ணே, முத்தழகு, மற்றும் குலதெய்வம் போன்ற தொடர்களிலும் இவர் நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது விஜய்டிவியின் பிக்பாஸ் 6 வது சீசனில் பங்கேற்கிறார். மெட்டி ஒலி சாந்தி என அழைக்கப்படும் சாந்தி அரவிந்துக்கு 42 வயதாகிறது. இவர் சென்னையில் பிறந்தவர். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இந்து மதத்தினைச் சார்ந்த இவருக்கு டான்ஸ் பிரதான தொழிலாகும். நடன ஆசிரியையாகவும் உள்ளார். இதுமட்டும் அல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சாந்தி அரவிந்த் மெட்டிஒலி, மற்றும் குலதெய்வம் போன்ற சீரியல்களில் ஒளிபரப்பான டைட்டில் பாடல்களின் மூலம் பெரும்புகழ் பெற்றவர்.வணங்காமுடி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது கல்யாணபரிசு 2 எனும் சன்டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

சாந்தி அரவிந்த் சன்டிவி சீரியல்களான கல்யாண பரிசு 2 , கண்ணான கண்ணே , அன்பே வா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஜூ டிவியில் வெளியான சூரியவம்சம், விஜய் டிவியில் வெளியாகி வரும் ஈரமான ரோஜாவே , முத்தழகு, மற்றும் கலர்ஸ் டிவியில் வெளியாகி வரும் கண்ட நாள் முதல், ஆகிய சீரியல்களில்நடித்துள்ளார். மேலும் இவர் சிறந்த வில்லி கேரக்டருக்காக விஜய் டிவி அவார்டை பெற்றுள்ளார். மேலும் அஜந்தா டிவி சார்பிலும் சிறந்த வில்லிக்கான விருதைப் பெற்றுள்ளார். இவர் நடித்த மெகா தொடரான மெட்டி ஒலியானது 811 எபிசோட்களில் வெளியானது.மேலும் 2014 ம் ஆண்டு துவங்கப்பட்டு

2020 ம் ஆண்டில் முடிவடைந்த கல்யாண பரிசு சீரியல் சன்டிவியில் 1840 எபிசோடுகளைக் கொண்டது. இதுவே இரண்டாவது நீண்ட தொடராக பெயரெடுத்தது.

ஜூ டிவியில் வெளியான சூர்யவம்சம் தொடரானது டைரக்டர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜீம் இதில் நடித்துள்ளார். அதன்பின்னர் சரிகம புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அன்பே வா தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

இதுபோல் சின்னத்திரையில் நல்ல முக்கிய கதாபாத்திரங்கள் அதாவது வில்லி கேரக்டரில் நடித்து விஜய் டிவி அவார்டு வாங்கி யஇவர் பிக்பாஸ் 6 சீசனில் தேர்வாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் நல்ல பரிச்யமான பெயரெடுத்தவர். அதாவது மெட்டிஒலி மெகா சீரியலில் நடித்தபோதே இவரது நடிப்பினையொட்டி மக்கள் இவருக்கு மெட்டி ஒலி சாந்தி என்ற பட்டப்பெயரினை அளித்துள்ளனர். அதற்கு பிறகு இவர் நடித்த வில்லி கேரக்டர்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. தற்போது பிக்பாஸில் நுழைந்துள்ளதால் மக்களுக்கு பரிச்சயமானவர் என்பது இவருக்கு ஒரு பிளஸ்பாயிண்டாக கருதப்படுகிறது. உள்ளே என்ன அடவாடித்தனம் பண்ணுவாரா? அல்லது அமைதியாக இருப்பாரா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியவரும்.

பிக்பாஸ் விஜய் டிவி ரசிகர்களுக்கான முக்கிய நிகழ்ச்சி. திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதுவரை 5 சீசன் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல்இந்த பிக்பாஸ் 6 வது சீசனும் என்ன பரபரப்பை ஏற்படுத்தப் போகிறதோ? யார்.. யார்... உள்ளே இருப்பார்கள் ? யார்.. யார்.. எலிமினேசன் ஆகப் போகிறார்கள் என்பதெல்லாம் பார்க்கும்ரசிகர்களுக்கு ஒருத்ரில்லிங்கை ஏற்படுத்துவதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே இப்போது துவங்கும்? அப்போது துவங்கும்? என பேசப்பட்டு பின்னர் கால தாமதமாகும் என்று சொல்லி வந்த நிலையில் திடுதிடுப்பென ஸ்டார்ட் ஆகி விட்டது பிக்பாஸ் 6வது சீசன். இரவில் பொழுது போயிடும் போங்க...இதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிக்பாஸ் 6 வது சீசன் இதுவரை ஆரம்பித்திருக்க வேண்டும் ஆனால் காலதாமதமாக துவக்கப்பட்டாலும்இதில் மொத்தம் ஒரு திருநங்கை உட்பட 20போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் 6 துவக்கத்திற்கான ப்ரமோக்களால் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த ப்ரமோக்கள் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் சீசன் 6 மற்ற 5சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 6 வது சீசனில் மொத்தம் 10 பெண் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். சீரியல் நடிகைகளாக மகேஸ்வரி, ரச்சிதாவுடன் இணைந்து சாந்தி அரவிந்தும் களமிறங்கியுள்ளார். டான்சரான அவர் மெட்டிஒலி மெகாத்தொடரின் அம்மி அம்மி அம்மி மிதித்து பாடல் மூலம் பிரபலமானவனர். இதன் மூலம் சீரியல்களிலும்தொடர்ந்து நடித்து வருகிறார். சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெயர்பெற்றுள்ள சாந்தி அரவிந்த் பிக்பாஸ் 6 சீசனிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 9:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!