/* */

சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழைக்காலங்களில் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

HIGHLIGHTS

சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு
X

சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்தார்.

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஐந்து முக்கிய சாலை பாதை இடங்களான பஜார் ரோடு, திவான் பாஷ்ய தோட்டம், சுப்பிரமணிய சாலை, திருவள்ளூர் சாலை, ஜோன் சாலைக் உற்பட்ட சப்வே ஆகிய இடங்களை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள் ,மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் உடனிருந்தனர் இவர்களிடம் தண்ணீர் தேங்குவது குறித்த கேள்விகளை அமைச்சர்கள் கேட்டறிந்தார் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு :-

சுரங்க பாதைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் இங்கே நீர் தேங்கியுள்ளது அதனை இன்று இரவுக்குள் உடனடியாக சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்

முதலமைச்சர் ஒரு கமிட்டியை அமைத்து உள்ளார் மழைநீர் காலங்களில் நீர் தேங்காதவாறு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி சென்னையில் மழை காலங்களிலும் நீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும்

152 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு வேலைகளை ஆரம்பித்து விட்டதாக அமைச்சர் தெரிவித்தார் இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மெட்ரோ வாட்டர் மேலாண்மை இயக்குனர் விஜய ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 26 Jan 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...