/* */

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
X

ரேஷன் அரிசியுடன் கைதானவர். 

சென்னை, பெரம்பூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முக்கேஷ்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், பெரம்பூர் பிபி ரோடு சுடுகாடு அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பூர் நாகவல்லி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் 38 என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி