/* */

கொரோனா விதிமுறை மீறல்: பெரம்பூரில் திருமண மண்டபத்திற்கு சீல்

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கேரம் விளையாட்டுப் போட்டியில் கூட்டம் அதிகமாக கூடியதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

HIGHLIGHTS

கொரோனா விதிமுறை மீறல்: பெரம்பூரில் திருமண மண்டபத்திற்கு சீல்
X

அபராதம் கட்ட மறுத்த கல்யாண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட மிக அதிகமான அளவு நபர்கள் கூடியுள்ளதாக திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவிக நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்திற்கு சென்று அங்கு உள்ள நபர்களை வெளியேற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புளியந்தோப்பு துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். குறிப்பிட்ட அந்த மண்டபத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் அதை கட்டும்படி வலியுறுத்தினர். ஆனால் மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் அபராதத்தை கட்ட முடியாது என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் வேறு வழியின்றி அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 20 Sep 2021 4:57 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்