சென்னை பெரம்பூரில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை

காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை பெரம்பூரில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை
X
 பைல் படம்

சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள 14ஆவது மத்திய குறுக்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அஸ்வத் செயின் (வயது 55). இவர் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பிரமுகராவர்.

இவருக்கு இரண்டு பெண் மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து விட்டார். இரண்டாவது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இவர் அதே பகுதியில் துணிக்கடையை கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறார். தனது துணிக்கடை வியாபாரத்திற்காக ஒருவரிடம் 7லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாகவும் தொடர்ந்து கடன் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் படுக்கை அறையில் காய் வெட்டும் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் படுக்கையறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால், சந்தேகமடைந்த அஸ்வத்ஜெயின் மனைவி படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தனது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர், எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்கேபி நகர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அஸ்வத் ஜெயனின் பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

எம்.கே.பி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர் கடன் தொல்லையால் தற்கொலையா அல்லது கொலையா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2021-10-14T11:45:12+05:30

Related News

Latest News

 1. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 2. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 3. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 4. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 5. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 6. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 7. ஸ்ரீரங்கம்
  திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
 8. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 10. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...