/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை - உயர் நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை - உயர் நீதிமன்றம்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை - உயர் நீதிமன்றம்!

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என டிசம்பர் 2ஆம் தேதி. உத்தரவிட்டிருந்தனர்.

மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வார்டு வாரியாக இல்லாமல், மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாக கருதி ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மண்டல வாரியாக எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனவரி 27க்குள் வெளியிட வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால் நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், அறிவிப்பாணை வெளியிட எவ்வித தடையும் விதிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தனர்.

Updated On: 6 Jan 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது